ஆசிரியர்களுக்கு அதிக சலுகையளித்தது அதிமுக அரசு. சண்முகநாதன் பேச்சு. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சாத்தான்குளம் வட்டாரம் சார்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பாராட்டுவிழா முன்னாள் மாநில பொருளாளர் வைத்தியலிங்கம் படத்திறப்புவிழா, இயக்க உறுப்பினர்கள் கூடுகை திருவிழா, ஆகிய முப்பெரும் விழா சாத்தான்குளம் புலமாடன்செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
வட்டார தலைவர் அந்தோணி ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சிக்கண நாணய சங்கத்தலைவர் ரெக்ஸ் அமிர்தஜெயரத்தினம், நிர்வாக குழு உறுப்பினர் தங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ் வரவேற்றார். முதலூர் டிஎன்டிடிஏ நடுநிலை பள்ளி தாளாளர் நவராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். முன்னாள் மாநில பொருளாளர் வைத்தியலிங்கம் படத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி துணைப்பொதுச்செயலாளர் ரங்கராஜன் திறந்து வைத்து பேசினார். ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நினைவுபரிசு வழங்கி ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் பேசினார்.
எம்எல்ஏ சண்முகநாதன் பேசியதாவது அதிமுக ஆட்சியில்தான் ஆசிரியர்களுக்கு அதிக சலுகை வழங்கப்பட்டது. பஞ்.யூனியனில் செயல்பட்டு வந்த ஆசிரியர்களை அரசு ஊழியர்களாக்கியது, ஆசிரியர்களுக்கு நேரடி சம்பளம் வழங்கியது. மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் வழங்கியது எல்லாம் அதிமுக ஆட்சியில்தான் நடந்தது. கிறிஸ்தவ நாடார்களை பிற்பட்ட வகுப்பில் எம்ஜிஆர்தான் சேர்த்தார். ஆசிரியர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்குவதால் தனியார் பள்ளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சாத்தான்குளத்தில் கருமேனியாற்றின் உயர்மட்டபாலம், 5.5 கோடி மதிப்பீட்டில் நீதிமன்ற கட்டிடம், பஸ்டெப்போ, குடிதண்ணீர், மக்களுடைய கோரிக்கைகள் உடனுக்குடன் ஏற்கப்பட்டு தீர்வு செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகளான ஊதிய உயர்வு நிலுவைத்தொகை கிடைப்பதற்காக சட்ட சபையில் வலியுறுத்துவேன், இந்த சமுதாயத்தை நல்வழிப்படுத்துவது ஆசிரியரின் கடமை என பேசினார். பொதுச்செயலாளர் ரங்கராஜன் 1981-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை அங்கீகாரம் வழங்கினார். 1.4.2003க்கு பிறகு வேலையில் சேர்ந்த 60ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பென்சன் வழங்குவது மறுக்கப்பட்டது. 1.1.2006-ல் புதிய ஊதிய விகிதத்தில் ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 15ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 1.6.1986 முதல் சரிசமமாக இருந்த ஊதியம் 2006 சம்பள கமிஷனால் இழந்திருக்கிறோம். தற்பொழுது முதன்முதலாக அதிமுக அரசு இந்த முறைதான் சம்பள கமிஷனை அமல்படுத்தியுள்ளது. இதுவரையிலும் அதிமுக அரசு காலத்தில் சம்பள கமிஷன் அமல்படுத்தப்படவில்லை. புதிய சம்பள கமிஷன் பரிந்துரையின்படி தற்போதைய அரசு ஏற்றுள்ளது. ஆனால் 21மாதம் ஊதிய உயர்வு நிலுவைத்தொகை வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது, அதை வழங்க வேண்டுமென பேசினார்.
முன்னாள் மாநில பொருளாளர் வின்சென்ட் பர்னபாஸ் மாநில துணைச்செயலாளர் ராமசுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் சிவன், தலைவர் ஜீவா பொருளாளர் சாந்தகுரூஸ், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத்தலைவர் ஆறுமுக நயினார், திருநெல்வேலி மாவட்டச்செயலாளர்கள் செய்யது இப்ராகிம் மூசா, விருதுநகர் குணசேகரன், ராமநாதபுரம் முருகன், ஓய்வுபிரிவு வட்டாரச்செயலாளர் செல்வராஜ் சாமுவேல், முன்னாள் வட்டாரத்தலைவர் ராஜ்மோகன், ஜாய்லட் ரூபி, ரெக்ஸ்லின் வின்னரசி, பால்பாண்டி, வட்டாரச்செயலாளர்கள் திருச்செந்தூர் தியாகராஜன், ஆழ்வார்திருநகரி இம்மானுவேல், ஸ்ரீவைகுண்டம் பேச்சிமுத்து, விளாத்திகுளம் இந்திராணி, கோவில்பட்டி ஜான்சன், புதுக்கோட்டை நிர்மல் கோயில்ராஜ், கருங்குளம் தேவதாசன் இஸ்ரவேல், உடன்குடி மகாலிங்கம், அந்தோணி ஜெபராஜ், கிறிஸ்டோபர் செல்வதாஸ் ஆகியோர் பேசினர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், முன்னாள் துணை சேர்மன் ஜெயராணி, முன்னாள் பஞ்.தலைவர் பாலமேணன், பிள்ளைவிளை பால்துரை, ஒன்றிய செயலாளர் சௌந்திரபாண்டியன், நகர செயலாளர் செல்லத்துரை, துணைச்செயலாளர் சின்னத்துரை, மகாராஜன், ஸ்டாலின், தேவ வின்னரசி, புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி தாளாளர் கிருபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரப்பொருளாளர் அந்தோணி யூஜின் நன்றி கூறினார்.