அமுதுண்ணாக்குடியில் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியில் ஸ்மைல் எவர் ட்ரஸ்ட் தொடக்க விழா மற்றும் தமிழர் திருநாள் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிரஸ்ட் இயக்குநர் இம்மானுவேல் தலைமை வகித்தார். செயலர் விக்டர் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் கிறிஸ்டோபர் வரவேற்றார். மாணவர், மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.