
திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம் வழியாக திசையன்விளைக்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து இந்த வழியாக நான்கு முறை இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் தான் காலையில் வேலைகளுக்கு செல்வபவர்கள், கொத்தனார் வேலைகளுக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
ஆனால் இந்த பேருந்து கடந்த 6 மாத காலமாக முறையாக இயக்கப்படவில்லை. பேருந்தில் காலையிலும் மாலையிலும் அதிகமான அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பயணம் செல்வார்கள். அந்த நேரத்தில் பேருந்து அடிக்கடி நடுவழியில் பழுதாகி நின்று விடுகிறது.
அதே போல் இன்று திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம் வழியாக திசையன்விளை நோக்கி இந்த அரசு பேருந்து காலையில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. சாத்தான்குளத்தை தாண்டி சென்று கொண்டிருந்த போது திடிரென பேருந்து ஆக்சில் கட் ஆகி பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் பொதுமக்களும், மாணவ மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
அரசு பேருந்து கட்டணத்தை கூட்டிய தமிழக அரசு பேருந்தை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் அல்லது புதிய பேருந்து இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.