தூத்துக்குடி மாவட்டத்தில் 7-வது புத்தகக் கண்காட்சி நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திரு விஷூ மகாஜன் அவர்கள் தலைமையில் முதற்கட்டக் கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் திருமதி பிரியங்கா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு. பிரபு மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் சார்பில் சாகித்ய அகாதெமி விருதாளர் எழுத்தாளர் சோ. தர்மன் அய்யா, முனைவர் மணிமொழிச்செல்வன் , தமிழ்ச்செம்மல் நெய்தல் ஆண்டோ , வாசிப்பு இயக்க எழுத்தாளர் தூத்துக்குடி மாரிமுத்து மற்றும் நானும் கலந்துகொண்டோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சி நடத்த வேண்டும் என்ற எழுத்தாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி. விரைவில் தூத்துக்குடியில் புத்தகக் கண்காட்சி நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.
முத்தாலங்குறிச்சி காமராசு


