தூத்துக்குடி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில்
திருக்குறள் தூதர் தமிழ்ச் செம்மல் விருதாளர் மோ . அன்பழகன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் தொடக்கப்பள்ளியில் ஞாயிறு மாலையில் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது பழரசம் பா. விநாயகமூர்த்தி அவர்கள் ஆசியுடன்
விழாவிற்கு துரை கனேசன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் வரவேற்புரையாற்றினார் தாழை மணி அவர்கள் துணைச் செயலாளர் தமிழ் இலக்கிய பேரவை
சிறப்புரையாற்றினார் சரஸ்வதி பாபு முதுகலை தமிழ் ஆசிரியை அவர்கள் கண்ணதாசன் படைப்புகளில் பெண் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்
அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்து கவிதை வாசித்து நினைவு பரிசு வழங்கினார் கவிஞர் தேவிகா பொன்னம்பலம் அவர்கள் தொடர்ந்து
திருக்குறள் தனபாலன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்
தமிழ் செம்மல் தாமிரபரணி காவலர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் தொடர்ந்து பாவலர் இளமுருகு அவர்கள் தமிழ் இலக்கிய பேரவை புரவலர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் தொடர்ந்து தமிழ் செம்மல் அன்பழகன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள் இந்நிகழ்வில் ஆசிரியர் பலர் கலந்து கொண்டனர் நன்றியுரை வழங்கினார் ஜெயக்குமார் தமிழ் இலக்கியப் பேரவை பொருளாளர் அவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதி அருமைநாயகம் செய்திருந்தார்


