தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்புத் திட்டத்தின்கீழ், இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசிப் பணி 23.11.2026 முதல் 24.12.2026 வரை நடைபெறவுள்ளது.
ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆர் வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோயால் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு அதிக காய்ச்சல், மூக்கிலிருந்து சளி வடிதல், தீனி உட்கொள்ளாமை மற்றும் இறுதியாக இறப்பு ஏற்படுகிறது. இந்நோயினை தடுக்க 4 மாதங்களுக்கு மேல் வயதுடைய வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியினை பெற இயலும்.
ஆட்டுக்கொல்லி நோய் வராமல் இருக்க செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளுக்கு குறிப்பாக 4 மாதத்திற்கு மேல் வயதுடைய ஆடுகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போடப்பட வேண்டும். இதற்கென தூத்துக்குடி மாவட்டத்திற்கு 5,59,000 டோஸ்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பணி கால்நடை மருத்துவ குழுவினரால் அனைத்து கிராமங்களுக்கும் விடுபாடின்றி மேற்கொள்ளப்படும். எனவே, இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை ஆட்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்குமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்


