திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா பாதுகாப்பு தொடர்பாக டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை நடைபெறவுள்ள கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை (15.11.2026) நடைபெறவுள்ள கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு தலைமையில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை முதலாவது அணியின் தளவாய் கார்த்திகேயன் (திருச்சி), ஒன்பதாவது அணியின் தளவாய் செல்வமணி (மணிமுத்தாறு) மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


