கோவில் தெற்கு பகுதி (கடற்கரை, நாழிகிணறு) பகுதிகளில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் நவாப்பழ சாலை, அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன், முருகாமடம் (தெப்பகுளம்) வந்து பரமன்குறிச்சி ரோடு அல்லது குலசேகரபட்டிணம் ரோடு செல்லவும். அல்லது முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன் வந்து மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி இரும்பு ஆர்ச் ஜங்ஷன் வழியாக மெயின் ஆர்ச் வந்து தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி ரோடு செல்லவும்.

கடற்கரை பகுதியில் கூட்டம் மிகஅதிகாமாக இருக்கும்பட்சத்தில் (தேவைப்படும்பட்சத்தில்) நாழிகிணறு பழைய பேருந்து நிலையம், முருகன் விடுதி, வள்ளியம்மை Quarters, வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு (யாதவர் தெரு) வழியாக குலசேகரபட்டிணம் ரோடு (எடிசன் மருத்துவமனை – முருகாமடம் அருகில்) செல்லவும். அல்லது கடற்கரை அய்யா கோவில், கமலா கார்டன், கிருஷ்ணா தியேட்டர், வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு (யாதவர் தெரு) வழியாக குலசேகரபட்டிணம் ரோடு (எடிசன் மருத்துவமனை – முருகாமடம் அருகில்) செல்லவும்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும், பொதுமக்களும் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மழை அதிகமாகப் பெய்யும் பட்சத்தில் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் மாற்று ஏற்பாடுகளுக்குப் பக்தர்களும் பொதுமக்களும் முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.