சிறப்பாகச் செயல்பட்ட துறைமுக அதிகாரிகளுக்கும், 2025-26 நிதியாண்டில் சிறப்பாகச் செயல்பட்ட துறைமுக உபயோகிப்பாளர்களுக்கும் விருதுகளை வழங்கி அவர் பாராட்டினார்.

‘கடல்சார் அம்ரித் கால் தொலைநோக்குத் திட்டம் 2047’ (Maritime Amrit Kaal Vision 2047) இன் கீழ் மேற்கொள்ளப்படும் இத்திட்டங்கள், தென்தமிழகம் முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்கள், சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் உற்பத்தித் தொழில்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.