மேலும் ஒரு விருது
எனக்கு அப்துல் கலாம் விருது கிடைத்தது!
அப்துல் கலாம் பேரன் வழங்கினார்
தூத்துக்குடி முத்தையாபுரம் மரிய மகாலில் சிறப்பாகத் தொண்டு புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இதில் எனக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. கிராம உதயம் நிர்வாக இயக்குநர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். மேல ஆழ்வார்தோப்பு கிளை மேலாளர் வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். நான் எழுதிய கிராம உதயம் நிறுவனர் சுந்தரேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறான ‘மரம் நடும் மாமனிதர்’ என்ற நூல் வெளியிடப்பட்டு எனக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை இணை நிறுவனரும், அப்துல் கலாம் அவர்களின் பேரனுமான ஷேக் சலீம் இவ்விருதை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோபாலசமுத்திரம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி, கிராம உதயம் பகுதிப் பொறுப்பாளர் முருகன், கண்ணன், தன்னார்வலர்கள் ஆறுமுகவடிவு, பிரேமா, முருகசெல்வி, முத்துசெல்வன், ஆரியநாச்சியார், ஆனந்தசெல்வன், லிஜியா, ஜெஸிந்தா, மலர்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர். விருது கிடைக்கக் காரணமாக இருந்த கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் உள்பட என்னோடு தொண்டுப் பணியில் ஈடுபடும் கிராம உதயம் சொந்தங்களுக்கு மிக்க நன்றி.
– முத்தாலங்குறிச்சி காமராசு


