தூத்துக்குடி முத்தையாபுரம் மரிய மகாலில் சிறப்பாகத் தொண்டு புரிந்த கிராமப்புறப் பெண்களுக்கு அப்துல் கலாம் விருது வழங்கும் விழா, ‘மரம் நடும் மாமனிதர்’ புத்தக வெளியீட்டு விழா, 3 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா, துணிப்பை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. கிராம உதயம் நிர்வாக இயக்குநர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். மேல ஆழ்வார்தோப்பு கிளை மேலாளர் வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிராம உதயம் நிறுவனர் சுந்தரேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறான ‘மரம் நடும் மாமனிதர்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலை அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை இணை நிறுவனரும், அப்துல் கலாம் அவர்களின் பேரனுமான ஷேக் சலீம் வெளியிட்டார். அதன் பின் பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோபாலசமுத்திரம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி, கிராம உதயம் பகுதிப் பொறுப்பாளர் முருகன், கண்ணன், தன்னார்வலர்கள் ஆறுமுகவடிவு, பிரேமா, முருகசெல்வி, முத்துசெல்வன், ஆரியநாச்சியார், ஆனந்தசெல்வன், லிஜியா, ஜெஸிந்தா, மலர்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


