திருநெல்வேலி காவல் சரகம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 338 மனுக்கள் பெறப்பட்டன.
திருநெல்வேலி சரக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு, உத்தரவின்பேரில், பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டன.
திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் மொத்தம் 338 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டன. எஞ்சிய 332 மனுக்கள் மீது துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


