தூத்துக்குடியில் 39 மீனவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார்
தூத்துக்குடியில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 39 மீனவர்களுக்கு மானிய விலையிலான இருசக்கர வாகனத்துடன் கூடிய குளிர்காப்புப் பெட்டிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் வழங்கினார். தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை வகித்தார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (PMMSY) மீன் விற்பனையினை ஊக்குவித்திடவும் மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் (TAFCOFED) வாயிலாக செயல்படுத்தப்பட்டு இத்திட்டம் வருகிறது. இத்திட்டத்தினால் மீன் வியாபாரம் செய்பவர்கள் மீன்களை கெட்டுப்போகாமல் சுகாதாரமான முறையில் மீன் சந்தைக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட இருசக்கர வாகனத்துடன் கூடிய குளிாகாப்பு பெட்டி (50 லிட்டர்) வழங்கப்படுகிறது. இந்த இருசக்கர வாகனத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டி (மொத்த விலை-ரூ.75,272/- பொதுப் பிரிவினருக்கு 40% மானியமும், ஆதிதிராவிடர் மற்றும் மகளிர் பிரிவுக்கு 60% மானியமாக (35-பொது, 4-மகளிர்) வழங்கப்படுகிறது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து எப்.டி.என்.62 புதிய துறைமுகம் கடல்கன்னி மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 284 நபர்களின் பங்கு தொகைக்கு ஈடாக 5,68,000/- (Equity Grant). 2,72,000/- (Management Cost) தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்திடமிருந்து (NCDC) பெறப்பட்டு போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருட்கள் மற்றும் ஜெராக்ஸ் மற்றும் பிரிண்டிங் கடையும், எப்.டி.என்.65 பனிமய அன்னை மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 430 நபர்களின் பங்கு தொகைக்கு ஈடாக ரூ.8,60,000/-(Equity Grant) மற்றும் நிர்வாக செலவுக்காக ரூ.2,72,000/- (Management Cost) தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்திடமிருந்து (NCDC) பெறப்பட்டு போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்ப்படுத்தப்பட்டு மீன் சிற்றுண்டி மற்றும் ஆவின் பாலகத்தினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


