தூத்துக்குடியில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மொத்தம் 272 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி கடந்த ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் ஓய்வில் இருந்தனர்.
இரண்டு நாட்கள் ஓய்விற்குப் பிறகு இன்று மீண்டும் அவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். சுழற்சி முறையில் இன்று அதிகாலை 211 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றுள்ளன.


