தூத்துக்குடி மாநகராட்சியில் 100% மக்கள் தொகை கணக்கெடுப்பை உறுதி செய்யும் வகையில், விடுபட்ட வீடுகளைச் சேர்க்க மண்டல வாரியாக அலுவலர்களின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாநகராட்சியின் நான்கு மண்டலப் பகுதிகளிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் 600 கணக்கெடுப்பாளர்களும், 85 கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுக்கும் பணியானது ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறுகிறது.
கணக்கெடுப்பு நிறைவடைய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், காலியாக உள்ள வீடுகள், பூட்டப்பட்ட வீடுகள் மற்றும் கணக்கெடுப்பில் விடுபட்ட வீடுகளின் உரிமையாளர்கள் உடனடியாகத் தங்கள் வீடுகளைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் எந்தவொரு வீடும் விடுபடாமல் 100% கணக்கெடுப்பை உறுதி செய்யும் வகையில், விடுபட்ட பொதுமக்கள் வரும் 30.08.2026-க்குள் கீழ்க்காணும் மண்டல உதவிப் பொறுப்பு அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம்:
மண்டல வாரியான அலுவலர்களின் தொடர்பு எண்கள்:
மேற்கு மண்டலம்: வி. மாலதி நல்லமுத்து 94865 44131 / மு. கணேச மூர்த்தி 83446 17090
வடக்கு மண்டலம்: ஜி. சுப்பிரமணியன் 98654 59147 / மு. மாரி மனோஜ் 93606 83804
கிழக்கு மண்டலம்: டி. சுகுமார் 63814 17937 / பா. சுஜித் 93422 55384
தெற்கு மண்டலம்: அலேக்கம்மாள் 93449 20150 / பி. ஹாரிஹரசுதன் 73588 32004
இலவச சேவை மைய எண்: பொதுமக்கள் கூடுதல் தகவல்களுக்குத் தூத்துக்குடி மாநகராட்சியின் இலவச சேவை மைய எண்ணான 1800 203 0401 என்ற எண்ணை அழைத்தும் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்


