தூத்துக்குடியில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை (18.08.2026) ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்பிடித்துறைமுக மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 65 கி.மீ. வரையிலும் வீசக்கூடும். இதன் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை (18/08/2026) ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து விசைப்படகு உரிமையாளர்களும், மீனவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


