தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலவாரியங்களில் உறுப்பினர்களாகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பழங்குடியினர் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம், புதிரை வண்ணார் நலவாரியம் மற்றும் தூய்மைப் பணியாளர் நலவாரியம் ஆகியவற்றில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்படாதவர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நல வாரிய உறுப்பினர்களுக்கான சாதிச்சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் இணையவழி வாயிலாக விண்ணப்பித்துப் பெறுவதற்கு இச்சிறப்பு முகாம்கள் வழிகோலும். தகுதியுடைய நபர்கள் உரிய ஆவணங்களுடன் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
இம்முகாமானது 18.07.2026 அன்று திருச்செந்தூர் / ஸ்ரீவைகுண்டம் / கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 25.07.2026 அன்று தூத்துக்குடி / திருச்செந்தூர் / கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 01.08.2026 அன்று தூத்துக்குடி / ஸ்ரீவைகுண்டம் / திருச்செந்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 08.08.2026 அன்று தூத்துக்குடி / திருச்செந்தூர் / கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 16.08.2026 அன்று தூத்துக்குடி / ஸ்ரீவைகுண்டம் / திருச்செந்தூர் / விளாத்திகுளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


