மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில், தையல் பயிற்சி முடித்த கிராமப்புறப் பெண்களுக்குத் தையல் சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது. ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாகீர் அகமது தலைமை வகித்து, இலவசத் தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 40 பேருக்குச் சான்றிதழ்களும், 20 பேருக்கு இலவசத் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தையல் ஆசிரியர் இசக்கியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தன்னார்வத் தொண்டர் பிரேமா வரவேற்றார். ஓய்வுபெற்ற பி.டி.ஓ. வெங்கடாச்சாரி, ஓய்வுபெற்ற பேரூராட்சி நிர்வாக அதிகாரி மணிமொழிசெல்வன், தன்னார்வத் தொண்டர் முத்துராஜ், பகுதி அலுவலர் கண்ணன், புளியங்குளம் கிராம உதயம் மையத் தலைவர்கள் வள்ளியம்மாள், அனிதா, கோகிலா, இந்துமதி, கோமதி உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியைப் பகுதி அலுவலர் ஆனந்த் தொகுத்து வழங்கினார். பகுதிப் பொறுப்பாளர் ராமலெட்சுமி நன்றி கூறினார்.


