காயல்பட்டினத்தில் காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கத்முல் குர்ஆன் மஜ்லிஸ் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான – சதுக்கை தெருவில் அமைந்துள்ள தியாகி பீ.எச்.எம். அப்துல் காதிர் மன்ஸிலில், கத்முல் குர்ஆன் மஜ்லிஸ் நடைபெற்றது. நகர தலைவர் எம்.எஸ். நூஹ் ஸாஹிப் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, அறிமுகவுரை ஆற்றினார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ். அபூ ஸாலிஹ் வரவேற்றார்.
பெரிய குத்பா பள்ளி இமாம் ஹாஃபிள் கே.ஏ. நத்ஹர் ஸாஹிப் கத்முல் குர்ஆன் மஜ்லிஸை வழிநடத்தினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அயலக அணி மாநில துணைத் தலைவர் என்.டீ. முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, தகவல் தொழில்நுட்ப அணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே. சாலிஹ், கத்தார் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் கே.வி.ஏ.டீ. ஹபீப் முஹம்மத், மாவட்ட துணைச் செயலாளர் பெத்தப்பா சுல்தான், எம்.ஏ.சி. சுகைல் இப்ராஹீம், எம்.இசட். சித்தீக், சுதந்திர தொழிலாளர் யூனியன் ஜப்பான் உதுமான், இப்ராஹிம் அத்ஹம், ஜிஃப்ரீ, கே.எம். சாமு சிகாபுத்தீன், அரபி ஷாஹுல் ஹமீத், பஷீர், முஜீப், அய்யூப், தோல்சாப் சூஃபீ, ஏ.ஆர். அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கருத்துரை ஆற்றினர்.
மவ்லவீ எம்.எம். சுலைமான் லெப்பை மஹ்ழரீ துஆ பிரார்த்தனை செய்தார். கட்சியின் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டனர்.


