திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 22 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை துவங்குகிறது. இந்த நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 3, 4ம் தேதி: திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஜூன் 3, 4ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 5ம் தேதி: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் ஜூன் 5ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று முதல் ஜூன் 7ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


