‘ராட்டினம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தன் முத்திரையைப் பதித்து உச்சத்தைத் தொட்டவர் சிறந்த இயக்குநர் கே.எஸ். தங்கசாமி அவர்கள். இவர் தனது இரண்டாவது படைப்பாக ‘எட்டுத்திக்கும் மதயானை’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதனை அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது.
இந்தத் திரைப்படத்தில் நம் நெல்லை முத்தமிழ் அவர்கள் துணை இயக்குநராகப் பணியாற்றினார். இத்திரைப்படத்தின் மிக முக்கியச் சிறப்பம்சமாக, சுமார் 50-க்கும் மேற்பட்ட உள்ளூர் நடிகர்கள் இதில் நடிப்பதற்குக் கதாநாயகன், கதாநாயகிக்கு நிகராகப் பயன்படுத்தப்பட்டனர்.
செய்துங்கநல்லூரில் படப்பிடிப்பு நினைவுகள்:
இதற்கிடையில், நான் வசித்து வரும் செய்துங்கநல்லூர் கிராமத்தில் சுமார் 10 நாட்கள் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. எங்கள் ஊரில் உள்ள இல்லங்கள், தேநீர்க் கடை, முக்கியச் சாலைகள் எனப் பல்வேறு எதார்த்தமான இடங்களில் இதன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன் என்பது எனக்குக் கிடைத்த பெருமகிழ்ச்சி. கே.எஸ். தங்கசாமி அவர்கள் மிகவும் அருமையான, திறமையான ஒரு இயக்குநர். இவருடைய இந்தத் திரைப்படம் இப்போதும் அடிக்கடி ‘ராஜ் டிவியில்’ ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
புதல்வியின் பூப்புனித நீராட்டு விழா:
இயக்குநர் கே.எஸ். தங்கசாமி அவர்களின் அன்புப் புதல்வியின் பூப்புனித நீராட்டு விழா, தூத்துக்குடியில் உள்ள பிரபல ‘சோனா மகாலில்’ மிக விமரிசையாக நடைபெற்றது. விழாவில் நண்பர் சகா சங்கர் அவர்களின் இன்னிசைக் கலை நிகழ்ச்சி அரங்கேறி, விழா மேடையைக் கலைகட்டச் செய்தது.
இந்த மங்களகரமான இல்ல விழாவில்:
தினமலர் உரிமையாளர் தினேஷ் அய்யா அவர்கள்,
அசத்தப்போவது யாரு இயக்குநர்
ராஜ்குமார் அவர்கள்,
இயக்குநர் என். லிங்குசாமி அவர்களின் சகோதரரும், பிரபல திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்
சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்.
தினமலர் சீனிவாசன் அவர்கள்,
பிரபல பட்டிமன்ற நடுவர் புத்தனேரி செல்லப்பா அவர்கள்,
திரைப்படத் துணை இயக்குநர் நெல்லை முத்தமிழ் அவர்கள்,
மற்றும் ‘அசத்தப்போவது யாரு?’ புகழ் நகைச்சுவை நடிகர் பாலா அவர்கள்
உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்களும், திரையுலகினரும், நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மனதிற்கு மிகவும் நிறைவானதொரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நெகிழ்ச்சியும் சந்தோஷமும் எனக்கு ஏற்பட்டது.
மனமார்ந்த வாழ்த்துகள்!
என் இனிய இயக்குநர் சார் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்! தங்களின் குடும்பமும், தங்களது அன்பு மகளும் எவ்வித நோய் நொடியும் இன்றி, எல்லாச் செல்வங்களும் பெற்று எப்போதும் சிறப்புடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை மனமாற வேண்டுகிறேன்!
அன்புடன்,


