தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், கையுறைகள் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் அடையாள அட்டைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தேவையான பிரத்யேகப் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவப் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலை வகித்தார். திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கனகராஜ் உட்பட மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.250520265


