விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாடசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த இவர், விளாத்திகுளம் தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அதனைத் தொடர்ந்து பரிசீலனை செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த வேட்புமனு தாக்கலின் போது புதிய தமிழகம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். ஒன்றிய செயலாளர்கள் உமையணன், குமரன், ஜெயவீரன், விஜயகுமார், சிவசெல்வம், காமராஜ், நிர்வாகிகள்பெத்துராஜ், முனியசாமி, ஜேம்ஸ், பெருமாள், காளிதாஸ், மேலும் கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


