2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் களமிறங்கிய மார்கண்டேயன், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள வணிகர்களிடமும், காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடமும் நேரில் சென்று ஆதரவு திரட்டினார். பொதுமக்களிடம் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
வாக்குச் சேகரிப்பின் போது திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றியச் செயலாளர் இம்மானுவேல், பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, பேரூராட்சி மன்றத் தலைவர் சூர்யா ஐயன்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் புவிராஜ், தாலுகாச் செயலாளர் ஜோதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் (விளாத்திகுளம் தொகுதி) சடையாண்டி மற்றும் ஒன்றியச் செயலாளர் சபாபதி உள்ளிட்டோர் உடன் சென்றனர்


