தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இக்கூட்டணியில்: பாஜக 27 தொகுதிகள், பாமக 18 தொகுதிகள், அமமுக 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
ஒட்டப்பிடாரம் (தனி) சுந்தர்ராஜன்
மடத்துக்குளம் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு
சைதாப்பேட்டை செந்தமிழன்
மன்னார்குடி எஸ். காமராஜ்
பூவிருந்தமல்லி (தனி) ஏழுமலை
பெரியகுளம் (தனி) கதிர்காமு
திருச்சி மேற்கு தொட்டியம் ராஜசேகரன்
காரைக்குடி தேர்போகி பாண்டி
திருப்பத்தூர் ஞானசேகரன்
நான்குநேரி இசக்கிமுத்து
திருவையாறு வேலுகார்த்திகேயன்
டி.டி.வி. தினகரனிடம் வாழ்த்து
ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர்ராஜன், கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்


