Description
தாமிரபரணி கரை எங்கும் மகா புஷ்கரம் பணிக்கான முன்னெடுப்புகள் நடந்த போது அதற்கு தலைமை தாங்கி வேலாக்குறிச்சி ஆதீனம் அவர்கள் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தினார்கள்.
அந்த சமயத்தில் புஷ்கரம் என்ற நிகழ்ச்சி தாமிரபரணி ஆற்றில் கிடையாது எனவே இதனை நடத்தக்கூடாது என சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த தடையை உடைக்க இதற்கு முன் புஷ்கரம் நடந்ததற்கான வரலாற்று பதிவுகள் உள்ளனவா என ஆதின கருத்தா அவர்கள் தேடினார்கள். அப்போது நான் எழுதிய தாழை தாமிரபரணி புத்தகம் அவருக்கு கை கொடுத்தது.
12 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி கரையில் மகா புஷ்கர நிகழ்வில் நடந்த நிகழ்வையும் அதற்காக ஆந்திராவில் இருந்து சுமார் 2000 யாத்திரிகர்கள் வந்து புனித நீராடியதையும் அதில் பதிவிட்டிருந்தேன். வழக்கறிஞர் மணிகண்டன் மற்றும் புலவர் மகாதேவன் முயற்சியால் எனது நூல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது அதன் பின்னரே நீதிமன்றம் மகா புஷ்கரம் நடத்த அனுமதி அளித்தது






