சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் மற்றும் நீர் தின விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் ஆண்டுதோறும் மார்ச் 21-ம் தேதி உலக காடுகள் தினமும், மார்ச் 22-ம் தேதி உலக நீர் தினமும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில், தற்போது பெருகி வரும் தண்ணீர் தேவை மற்றும் உலக அளவில் மாறிவரும் புவி வெப்பமயமாதல் குறித்த முக்கியக் கருத்துகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மூத்த செயல் உதவித் தலைவர் (பணியகம்) ஸ்ரீனிவாசன் மற்றும் உதவித் தலைவர் (உற்பத்தி) சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கிச் சிறப்பித்தனர்.
பசுமைப் பணிகள்விழாவின் ஒரு பகுதியாக, தொழிற்சாலையின் SIOPP வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் ISO தரச்சான்றிதழ் தணிக்கையாளர்கள் கேப்டன் பாலசுப்பிரமணியன், ராஜகோபால், நாகராஜன் மற்றும் ஆலையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலையில் பராமரிக்கப்பட்டு வரும் பசுமைச் சூழலை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இவ்விழாவில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் சிறப்புகளை விளக்கும் “DCW & Biodiversity” என்ற புத்தகம் காட்சிப்படுத்தப்பட்டது. இதனைப் பார்வையிட்ட அதிகாரிகள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.நிகழ்ச்சியின் இறுதியில் சுற்றுச்சூழல் துறை பொது மேலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்புத் துறை, சிவில் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் இணைந்து செய்திருந்தனர்.


