தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமையாசிரியர் நா. மாரியப்பன் தலைமை வகித்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுமாணவர்களுக்கு சாலை பாதுகாப்பின் அவசியம், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
துணை ஆய்வாளர் பாலன்மற்றும்தலைமை காவலர், எபெனேஷ்ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி, மாணவர்களுக்கு போக்குவரத்து நடைமுறை விளக்கங்களையும் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த சிறப்பு பேரணி பள்ளி வளாகத்திலிருந்து நடைபெற்றது. இதில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்முதுகலை ஆசிரியர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.


