ஒடிசாவில் நடைபெற உள்ள பல்கலைகழகங்களுக்கு இடையிலான அகில இந்திய ஹாக்கி போட்டிக்கு கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வியியல் துறையில் 2ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் மணிமாறன், விஷால், கிருஷ்ணன் ஆகியோர் ஒடிசாவில் நடைபெற உள்ள சம்பல்பூர் பல்கலைகழகத்தில் பல்கலைகழகங்களுக்கு இடையிலான அகில இந்திய ஹாக்கி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
சென்னை சத்தியபாமா இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியில் ஜனவரி 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்ற பல்கலைகழகங்களுக்கு இடையிலான தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடி ஒடிசாவில் ஜனவரி 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ள அகில இந்திய ஹாக்கி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
அகில இந்திய அளவில் நடைபெற உள்ள ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களான மணிமாறன், விஷால், கிருஷ்ணன் ஆகியோரை கல்லூரி செயலாளர் கண்ணன்,கல்லூரி முதல்வர் செல்வராஜ்,கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஜெயசிவா உள்பட பேராசிரியர்கள் பலர் வாழ்த்தினர்.


