தமிழ்நாடு வனத்துறை , கிராம உதயம் இணைந்து நடத்திய விவசாயிகள் விழிப்புணர்வு முகாம், 500 மஞ்சள் துணி பைகள், 500 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல், பராமரித்தல் ஆகிய பணிகள் துவக்கவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார். கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் வனசரகர் கனிமொழி அவர்கள் நமது மாவட்டத்தில் வளரும் மரங்கள், வளர்க்கும் முறைகள், நடவு, நோய் தடுக்கும் முறை , மகசூல், மரம் நடுவதால் ஏற்படும் நலன் குறித்து வகுப்பு எடுத்தார். இந்த நிகழ்வில் சுமார் 500க்கு மேற்பட்ட மகளிர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மரக்கன்று கண்காட்சியை வன அலுவலர் இளையராஜா துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பகுதிபொறுப்பாளர்கள் கண்ணன், முத்துசெல்வன் , ஆனந்த செல்வன், தன்னார்வ தொண்டர் பிரேமா, முருகசெல்வி, ஆரிய நாச்சியார், லிஜியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தன்னார்வ தொண்டர் ஆறுமுகவடிவு நன்றி கூறினார்.


