பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்கிட வலியுறுத்தி தூத்துக்குடியில் கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தைப்பொங்கல் பண்டிகை தொகுப்புடன் ரூ.5000 வழங்கிட வலியுறுத்தி, தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு கோரம்பள்ளம் அரசு ஐடிஐ அருகில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் வகித்தார். இதில் கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


