நெல்லை கே.டி.சி.நகரில் உள்ள செர்வியா டெக் சொல்யூஷன்ஸ் அலுவலக வளாகத்தில் டெல்லியில் தேசியப்பாவலர் விருது பெற்ற பாப்பக்குடி முருகனுக்கு பாராட்டு விழா நடந்தது. அகவை முதிர்ந்த தமிழறிஞர் சங்க மாநிலத் தலைவர் கவிஞர் சுப்பையா தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார். தூய தமிழ்ப்பற்றாளர் சிவ செல்வ மாரிமுத்து வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலச் செயலாளர் நல்லாசிரியர் செ. இராஜேந்திரன் , வழக்குரைஞர் பாவலர் முனைவர் பாண்டியன், கண்ணதாசன் இலக்கிய மன்றம் செயலாளர் சேரை பாலகிருஷ்ணன், செர்வியா டெக் சொல்யூஷன்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இசை பட்டிமன்ற நடுவர் புத்தனேரி கோ. செல்லப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் உலகத்திருக்குறள் மையம் மாவட்ட தலைவர் புலவர் வை. இராமசாமி, மனவளகலை மன்ற ஆசிரியர் வேதிகா, கவிஞர் முத்துகுமார், கவிஞர் சந்தனகுமார். ஆசிரியர்மன்ற பொறுப்பாளர்கள் ராஜகுமார், அகஸ்டின், செல்வம், அருள்ராஜ், ராஜ், கனகராஜ், ஜேக்கப் துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பாப்பாக்குடி முருகன் ஏற்புரை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், கற்பக விருட்சம் நற்பணி மன்றம், செருந்தி இலக்கியமன்றம் , முத்து மோகன் பதிப்பகம் ஆகியவை இணைந்து நடத்தியிருந்தது.


