ஸ்ரீவைகுண்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம் ரூபாய். 12 இலட்சம் செலவில் கட்டுப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கானொலி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி ஸ்ரீவைகுண்டம் அலுவலத்தில் திருவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில். தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, மண்டல செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவிகோட்டப் பொறியாளர் அஸ்வினி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், தி. மு.க. மாவட்டதுணை செயலாளர் ஆறுமுக பெருமாள், ஒன்றிய செயலாளர் கொம்பையா, நகர செயலர் அப்புராஜ், பேரூராட்சி மன்ற தலைவர் பால முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருவைகுண்டம் ஆய்வாளர் நிஷாந்தினி வரவேற்றார், ஏரல் ஆய்வாளர் நம்பி, கள்ளபிரான் திருக்கோயில் செயல் அலுவலர் கோவல மணிகண்டன், ஆழ்வார்திருநகரி செயல் அலுவலர் சதிஷ், ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் ரமேஷ், தொல்லியல் வல்லுநர் மணி, ஸ்ரீனிவாச சோவா அறக்கட்டளை மேலாளர் . ராமசாமி, திருக்கோயில் பணியாளர்கள் முருகானந்ததாள். விஸ்வநாதன், மாரியம்மாள், முத்துகல்யாணி, இசக்கிபாண்டி, கவிதா, வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்ணு , கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வரர் அறங்காவலர் தியாகராஜன், முத்தாலங்குறிச்சி சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் அறங்காவலர் காமராசு, ராமவிநாயகர் கோயில் அறங்காவலர் வள்ளி, வல்லநாடு பாரதி சங்கரலிங்கம், ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


