தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வரை சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


