தூத்துக்குடியில் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் கன்டெய்னரில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
தூத்துக்குடி அருகே தட்டப்பாறை விலக்கு, செந்திலாம் பண்ணையில் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் இருந்த கன்டெய்னரில் இருந்து புகை வருவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கன்டெய்னரை திறந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்ட அலுவலர் கணேசன் அறிவுரையின்படி கன்டெய்னரில் இருந்த பஞ்சு பேல்கள் வெளியே எடுக்கப்பட்டு பல மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைக்கப் பட்டது. இதனால் தீ மேலும் பரவாமல் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


