தூத்துக்குடி மாவட்டத்தில் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு சிறப்பு உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம் 2026 ஆனது 01-01-2026 ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணி 04-11-2025 முதல் நடைபெற்று, பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து கடந்த 13-11-2025 முதல் பெறப்பட்டு BLO செயலி மூலம் தரவுகள் பதிவேற்றம் செய்யும் பல்வேறு துறை அலுவலர்கள் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், வாக்காளர்களின் வசதிக்காக இப்படிவங்களை பூர்த்தி செய்வதற்கும் திரும்ப பெறுவதற்கும், 15-11-2025, 16-11-2025 மற்றும் 22-11-2025, 23-11-2025 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்நேர்வில், வாக்காளிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பதிவேற்றம் செய்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள காலக்கெடுவானது குறுகிய காலமாகவே உள்ளதால், இந்நேர்வில் நாளது தேதி வரையில் வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்து வரப்பெறாத படிவங்களை பெறுவதற்காக அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிமன்ற அலுவலகங்கள், மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் கீழ்கண்டவாறு சிறப்பு உதவி மையங்கள் வரும் 24-11-2025 (திங்கள்கிழமை) முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம் அலுவலகங்கள் மற்றும் அலுவலர்கள்
1. அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியர்
2. அனைத்து கிராம ஊராட்சிகள் ஊராட்சி செயலர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)
3. அனைத்து பேரூராட்சிகள் செயல் அலுவலர் அனைத்து செயல் அலுவலர்கள்
4. அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் ஊராட்சி ஒன்றிய மேலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் ( வ.ஊ)
5. அனைத்து நகராட்சிகள் நகராட்சி ஆணையர்கள் நகராட்சி ஆணையர்கள்
6. அனைத்து மண்டல அலுவலங்கள், மாநகராட்சி துணை ஆணையர், மாநகராட்சி மாநகராட்சி ஆணையர்
மேற்கண்ட அலுவலகங்களில், இது வரை கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து சமர்பிக்காத வாக்காளர்கள், தங்களது கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்து ஒப்புகை பெறலாம். மேலும், மேற்கண்ட அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள், கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கும், வாக்காளர்கள் விபரங்களை தேடி கண்டறியவும் உதவுவர். இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்த்து, எந்தவொரு வாக்காளர் பெயரும் விடுபட கூடாது என்பதை உறுதி செய்ய, இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


