வாகனத்தில் அதிக வேகத்தில் செல்ல வேண்டாம், விபத்து ஏற்பட்டால் தாங்கள் குடும்பம் தான் பாதிக்கப்படும் என்று தூத்துக்குடியில் இளைஞர்களுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கினர்.
தூத்துக்குடியில் இரண்டு தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3பேர் உயிரிழந்தனர். மேலும் 2பேர் பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தூத்துக்குடியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவின்படி மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயில்வாகனம் தலைமையில் போலீசார் சார்பில் டபிள்யூஜிசி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர்கள், செல்போன் ஒட்டி வந்தவர்கள் மற்றும் குடிபோதையில் வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து அவர்களுக்கு அபாரம் விதித்தனர்.
மேலும் இளைஞர்கள் மத்தியில் பேசிய உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தாங்கள் உயிர் விலை மதிக்க முடியாத ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விபத்தில் பலியான சம்பவத்தை சுட்டிக்காட்டினார். மேலும் தாங்கள் பெற்றோர்கள் என்ன செய்தீர்கள் என கேட்டு கல்லூரியில் படிக்க உங்க பெற்றோர்கள் உங்களை எவ்வளவு சிரமப்பட்டு அனுப்புகிறார்கள்.
நீங்கள் வாகனத்தில் வேகமாக சென்று விபத்தில் சிக்கினால் உங்கள் குடும்பம் வந்து மருத்துவமனையில் காத்துக் கிடக்க வேண்டிய ஒரு அவல நிலை உள்ளது. ஆகையால் நீங்கள் கவனமாக செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் 3பேர் செல்லக்கூடாது. மிகுந்த வேகத்தில் செல்லக்கூடாது, வேகத்தில் செல்வதால் எதிலே வரும் பெண்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீது நீங்கள் மோதி விடுவதால் அவர்களுக்கும் இழப்பு ஏற்படுகிறது என்று கூறி அறிவுரை வழங்கினார்.


