தூத்துக்குடியில் நள்ளிரவில் மீனவரின் பைக் எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் சுனாமி காலனியைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ மகன் சகாய ஜோஸ்மின் பிரபு (42), மீனவர். இவர் நேற்று இரவு தனது இரு சக்கர வாகனத்தை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் பைக் தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.
ஆனால் அதற்குள் வாகனம் முழுவதும் எரிந்து விட்டது. வாகனத்தில் வைத்திருந்த ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், மற்றும் ரொக்க பணம் 6000 தீயில் எரிந்து விட்டது. இது குறித்து அவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


