தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 13.10.2025 அன்று மதுவிலக்கு காவல் நிலைய கஞ்சா எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த எட்வின் தங்கராஜ் மகன் ஜேம்ஸ் செல்லதுரை (25) என்பவரையும்,
கடந்த 11.10.2025 அன்று ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி தெற்கு கோவன்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜேஷ்குமார் (25) மற்றும் சேர்வைக்காரன் மடம் பகுதியை சேர்ந்த தெய்வமுத்து மகன் பாலமுகேஷ்(20) ஆகிய 3பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (12.11.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை 122 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


