தூத்துக்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைக்க பெற்றதும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட வால்டர் என்பவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், அரசு சார்ந்த உதவிகள் வழங்குவதற்கு வழிவகை இருப்பின் அதையும் ஏற்பாடு செய்து தருவதாகவும் வேறு உதவிகள் எதுவாக இருந்தாலும் உதவி செய்கிறேன் என்று உறுதியளித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ரெக்ஸ்லின், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.


