செய்துங்கநல்லூர்அருகில் உள்ள நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர பயிற்சி வகுப்பு பயிலரங்கம் நடந்தது. திருக்குறள் கண்காணிப்புக்குழு உறுப்பினர் மற்றும் பயிலரங்க குழுத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெய்தூண் பீவி முன்னிலை வகித்தார். பயிற்சியாளராக கொற்கை தமிழ் மன்ற தலைவர் சுப்பிரமணியன், முனைவர் ஜெயசித்ரா, எழுத்தாளர் காளிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பதிலளித்த ஐசக், வேலரசி ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியை டெமி அருள்டா உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை அருள்செல்வி நன்றி கூறினார்.


