அரசு மருத்துவமனைக்கும் வரும் நோயாளிகளின் பாதுகாவலர்களுக்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட காத்திருக்கும் அறையை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட இடத்தில் நடைபெற்று வரும் மருத்துவ பயனாளர்களுடன் வரும் உதவியாளர்கள் காத்திருக்கும் அறைக்கான பணிகளைப் பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். உடன் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


