தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் லிஃப்ட் வசதிகள் செய்வதற்காக என்டிபிஎல் நிறுவனம் ரூ.94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் (என்டிபிஎல்) நிறுவனத்தின் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் மின்தூக்கி வசதிகள் செய்வதற்காக ரூ.94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவகுமார், என்டிபிஎல் தலைமை செயல் அதிகாரி கே.ஆனந்தராமானுஜம் ஆகியோர் கையொப்பமிட்டனர். இந்நிகழ்வில், மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், என்டிபிஎல் பொது மேலாளர் கே.அரவிந்தராஜா, துணை பொது மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


