தூத்துக்குடி ரயில்வே தபால் நிலையம் 24×7 மணி நேர தபால் பதிவு சேவை இன்று முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையத்தில் மாலை 6 மணி முதல் பார்சல்கள் மற்றும் விரைவுத்தபால் அனுப்பும் வசதி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 24×7 மணி நேர தபால் பதிவு (புக்கிங்) சேவையாக இன்று (நவ.1) முதல் விரிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் 24×7 மணி நேர தபால் பதிவு (புக்கிங்) சேவையை பெற ரயில்வே தபால் நிலையத்தை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


