தூத்துக்குடியில் பிரதான சாலையில் பள்ளத்தால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஆர் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட விவிடி சாலையில் உள்ள பள்ளத்தால் நேற்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் பேரிகார்டு வைத்தும் காவல்துறையினர் எடுத்து விட்டு சென்று விட்டார்கள். எனவே, விபத்துக்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்


