தூத்துக்குடி அண்ணா நகர் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் எம்எஸ் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி விவிடி பகுதியில் இருந்து அண்ணா நகருக்கு செல்லக்கூடிய அண்ணா நகர் 2வது தெரு மெயின் ரோட்டில் மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை மேனுவல் பணிகள் நடைபெற்றது.
இந்த பணிகள் முடிந்தும் அதிகாரிகள் முறையாக கண்கானிக்காதன் விளைவாக அலட்சிய போக்கால், அந்த சாலையை முறையாக சீரமைக்காததால் தொடர் விபத்து என்பது ஏற்படுகிறது. எனவே உடனடியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


