கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் காலியாக இருந்த நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி புனித ஓம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் வரவேற்புரை வழங்கினார்.
இக் கூட்டத்தில் முதுகலை ஆசிரியர் பணித்தொகுதி சார்ந்த பிரச்சினைகள் பற்றிய தீர்மானங்களும் மற்றும் சங்க நலன் சார்ந்த தீர்மானங்களும் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து சங்க காலிப் பணியிடங்களுக்கான தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றது. இதனை தேர்தல் ஆணையரும் மாநில துணைத் தலைவருமான முஜிபுர் நடத்தினார்.
இத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட பொருளாளராக சுப்பிரமணியன், மாவட்ட அமைப்பு செயலாளராக பன்னீர்செல்வம் மாவட்ட சட்ட செயலாளராக செந்தில்குமார் மாவட்ட பிரச்சார செயலாளராக சோலைராஜ் கோவில்பட்டி கல்வி மாவட்ட தலைவராக சிலுவை அந்தோணிமுத்து ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக் கப்பட்டனர். நிறைவாக தூத்துக்குடி மாவட்ட இணைச் செயலாளர் கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.


