தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (40). இவர் மணிநகர் 3-வது தெருவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்த போது மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த ஆத்திக்கண்ணன் (45) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி இருப்பது தெரியவந்தது. இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக உள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


