தூத்துக்குடி மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் இன்று காலை தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடத்தப்பெற்றன.
கவிதைப் போட்டியில் செய்துங்கநல்லூர் செயிண்ட் மேரிஸ் கல்வியியல் கல்லூரி இயற்பியல் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவி ம. சந்தனமாரி முதல் பரிசுக்கும், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி உயிரி அறிவியல் முதலாம் ஆண்டு மாணவி க. நூஹா பேகம் இரண்டாம் பரிசுக்கும், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவன் சொ. மணிகண்டன் மூன்றாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்டுரைப் போட்டியில் தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரி வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவி சூ. டால்மியா முதல் பரிசுக்கும், தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி தமிழ் கல்வியியல் முதலாம் ஆண்டு மாணவன் மி. இருதய ஈசாக் இரண்டாம் பரிசுக்கும், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி உளவியல் மூன்றாம் ஆண்டு மாணவி ஜா. கிப்டா மேரி மூன்றாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
பேச்சுப் போட்டியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி குற்றவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி மு. கமலி முதல் பரிசுக்கும், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி முதுகலை வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஸ். அஸ்வர்னிஹா இரண்டாம் பரிசுக்கும், தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி ம. மகாலெட்சுமி மூன்றாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 10,000-மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 7000-மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 5000-மும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகளில் முதல் பரிசுப் பெற்றவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் வ.சுந்தர் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.


