தூத்துக்குடியில் இடமாற்றம் செய்யப்பட்ட பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையின் புதிய அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி பீச் ரோட்டில் இயங்கி வந்த பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பழைய பஸ் நிலையம் அருகில், மீனாட்சிபுரம் ரோடு மேற்கு பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வளாகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் வேலவன் ஹைப்பர் மார்கெட் நிர்வாக இயக்குனர் ஏ.தங்கவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில், வங்கியின் கோயம்புத்தூர் மண்டல மேலாளர் பாலாஜி, தூத்துக்குடி கிளை மேலாளர் பிரைட்சன், மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன், மற்றும் வங்கி அலுவலர்கள் வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


